தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஆகஸ்ட் 12ம் தேதி இந்தியத் திரையுலகத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா நடித்துள்ள 'கூலி', ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2'. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இரண்டு படங்களும் கடும் போட்டியை உருவாக்கி உள்ளன.
தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் இருவரும் இந்தப் படங்களில் உள்ளதால் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் இந்த இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், தெலுங்கு மாநிலங்களில் இந்தப் படங்களுக்கு நல்ல முன்பதிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிலும் இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இன்றைய நிலையில் 'கூலி' படத்தின் முன்பதிவு முன்னணியில் உள்ளது. அப்படத்திற்கு பிரிமியர் காட்சிகளுக்காக மட்டும் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். படத்தின் முன்பதிவு வசூல் மட்டுமே ஏற்கெனவே 1 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துவிட்டது.
'வார் 2' படத்திற்கு பிரிமியர் முன்பதிவு 2 லட்சம் யுஎஸ் டாலரைத் தொட்டுள்ளது. இது 'கூலி' முன்பதிவை விட சுமார் 8 லட்சம் யுஎஸ் டாலர் குறைவு. அமெரிக்காவில் 'வார் 2' படத்தின் தெலுங்குப் பதிப்புக்குத்தான் வரவேற்பு இருப்பதாகத் தகவல்.