தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து இயக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். வரலாற்று அடிப்படையில் படங்களை எடுக்கும்போது எடுப்பதற்கு முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கி பயன்படுத்தும் நிலையில் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்து வகையில் மணிரத்னம் வரலாற்றை திரித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியவற்றிடம் இந்த புகாரை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.