தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.
மகிழ்திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆன நிலையில், இப்படத்திற்காக அவருக்கு சென்னையில் தனி அலுவலகம் கூட அமைத்துக் கொடுத்துவிட்டார்களாம். படத்தின் கதாநாயகி யார், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் உறுதி செய்த பிறகு ஒரு முழுமையான அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதம்தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடும் விதத்தில் படம் உருவாகலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.