23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எத்தனையோ கதாநாயகிகள் அறிமுகமாகி பின் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தமிழிலும் மலையாளத்திலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடித்த பீட்சா, சேதுபதி ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.
அதேசமயம் மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த 2017ல் நடந்த நடிகை கடத்தல் நிகழ்வு சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாலும் மலையாள திரை உலகில் சில நடிகைகளால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நல அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் மலையாள திரை உலகில் இருந்து மறைமுகமாக ஓரம் கட்டப்பட்டார்.
ஆனாலும் அது பற்றி கவலைப்படாமல் மலையாளத்திலிருந்து தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடித்து வரும் ரம்யா நம்பீசன் தமிழில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் இவரது தோழி நடிகை மஞ்சு வாரியரின் சொந்த தயாரிப்பில் நடித்திருந்த 'லலிதம் சுந்தரம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா நம்பீசன்.
இந்த நிலையில் மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள 'பி 32 முதல் 44 வரை' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். வெவ்வேறு பகுதிகளில் இருந்து நகரத்திற்கு வந்து ஒரு விடுதியில் ஒன்றாக தங்கி இருக்கும் பெண்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழில் விஜய் ஆண்டனியுடன் இவர் ஜோடியாக நடித்துள்ள தமிழரசன் திரைப்படமும் மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருப்பதாக தனது பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யா நம்பீசன்.