துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர். திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களும் தயாரித்தார். தயாரிப்பு நிறுவனத்தை லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் கவனித்துக் கொண்டார்.
கடந்த 2014ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் 'எண்ணி 7 நாள்' என்ற படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்காக பி.வி.பி. கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கடன் பெற்றுள்ளனர். அந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் 35 லட்சத்துக்கு அவர்கள் காசோலை கொடுத்துள்ளனர். அந்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது.
அதைத்தொடர்ந்து பி.வி.பி. நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட், இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் விவாதங்களுக்கு பிறகு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு சைதாப்பேட்டை கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
மேல்முறையீடு
இந்நிலையில் இதுபற்றி லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை : ‛‛இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றி வரும் செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு லிங்குசாமி தெரிவித்துள்ளார்.