தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். சென்னை, கேகே நகர் பகுதியில் வசித்து வந்த அவர் நோயின் தாக்கம் தீவிரமாக நேற்று நள்ளிரவு காலமானார்.
சக்கரவர்த்தி, நிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை அஜித்தின் படங்கள். அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படத்தில் ஆரம்பித்த இவர்களின் கூட்டணி தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட்டி, வில்லன், ஜி, ஆஞ்சனேயா, வரலாறு வரை தொடர்ந்தது. சிம்புவை வைத்து காளை மற்றும் வாலு படங்களை தயாரித்துள்ளார்.
தனது மகன் ஜானியையும் ஹீரோவாக்கி ரேணிகுண்டா மற்றும் 18 வயசு ஆகிய படங்களை தயாரித்தார். கடைசியாக வாலு படத்தை தயாரித்தவர் அதன்பின் பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு விமல் நடித்து வெளிவந்து பாராட்டுகளை பெற்ற விலங்கு வெப்சீரிஸில் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்தால் இவரது உயிர் சென்னையில் பிரிந்தது. மறைந்த சக்கரவர்த்திக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.