சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இந்த ஒரு படத்தை மட்டும் இயக்கி வந்திருந்தால் இந்நேரம் இந்த படம் முடிந்து ரிலீஸுக்கு வந்திருக்கும். அதேசமயம் இடையில் ராம்சரண் நடிக்கும் படத்தையும் துவங்கியதால் இரண்டையும் அவர் மாறிமாறி இயக்கி வருகிறார்.
தற்போது ராம்சரண் படத்தை முடித்துவிட்ட ஷங்கர் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளார். இதில் கமலின் வசன பகுதிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன என்று சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கமல் தற்போது தனது காட்சிகளுக்கான டப்பிங் பேசும் பணியையும் துவக்கி உள்ளார். மறுபுறம் சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில்வர் புல்லட் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.