23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
1984ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'தி டெர்மினேட்டர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 'டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே' 1991ம் ஆண்டு வெளியானது, பின்னர், 'டெர்மினேட்டர் 3: ரெய்ஸ் ஆப் தி மெஷின்ஸ்' 2003ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு வந்த டெர்மினேட்டர் படங்கள் வெற்றிபெறவில்லை.
டெர்மினேட்டர் படங்கள் மக்களுக்கு சலித்துவிட்டது என்றும், படங்களின் திரைக்கதை ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இனி டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்னால்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'டெர்மினேட்டர்' வரிசையின் முதல் மூன்று பாகங்கள் சிறப்பாக அமைந்தது. எனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அவைகள் காரணமாக இருந்தது. நான்காவது படத்தில், நான் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்ததால் நடிக்கவில்லை. ஐந்து மற்றும் ஆறாவது வரிசை படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் இனி டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
அர்னால்ட் சமீபத்தில் 'பியூபர்' என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதில் அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இது தவிர தற்போது 'குங் பியூரி 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு ஓய்வெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.