கனவு நனவான தருணம் : மிர்னா மேனன் | கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் ‛சத்தியவான் சாவித்திரி' டிரைலர் வெளியானது | பிரித்விராஜ்-கரீனா கபூரின் தாயரா ஓடிடியில் வெளியானது | மைக்ரோ டிராமா தளத்தை தொடங்கும் அமீர்கான் | ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி படங்கள் : இது 5வது முறை | உடல் எடையைக் குறைத்த கீரவாணி : அனுபம் கேர் பாராட்டு | 'ஜெயில் மேட்ஸ்' ஆக மாறிய 'ரோஜா மல்லி கனகாம்பரம்' | தமிழில் அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் சாய் பல்லவி | பாடகி ஸ்ரீநிஷா காதல் திருமணம்: பாடகர் சாம் விஷாலை மணக்கிறார் | சினிமா ஆகிறது சோனியாவின் சுயசரிதை |

தரமணி, ராக்கி போன்ற படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள படம் அஸ்வின்ஸ். தருண் தேஜா இயக்க விமலா ராமன், சரஸ்வதி மேனன், உதயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வந்தன. ஏற்கனவே, இந்த படம் ஜூன் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இப்போது ஜூன் 23ம் தேதி அன்று வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் தொடர்பான பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸை தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள்.