பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நேரம், பிரமேம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் "அடுத்து நான் ஒரு தமிழ் படம் இயக்குகிறேன். இந்த படத்தை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்" என்று அறிவித்தார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.