திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தும், நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகருமான ரிச்சர்ட் ரிஷியும் சமீபகாலமாக அடிக்கடி ஒன்றாக இணைந்து போட்டோக்களை வெளியிட்டு வந்தனர். இதனையடுத்து இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அதை மேலும் நம்பும் வகையில் அண்மையில் ரிச்சர்ட் ரிஷிக்கு யாஷிகா முத்தமிடும் புகைப்படத்தையும், இருவரும் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தையும் ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதை யாஷிகாவும் ஷேர் செய்ததுடன் ஸ்டோரியிலும் வைத்திருந்தார். இதனால் யாஷிகாவும் ரிச்சர்டும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்துவிட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் இதை யாஷிகா அம்மா மறுத்தார். அது இருவரும் நடித்து வரும் படத்தின் காட்சிகள் என்றார்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி அளித்துள்ள ரிச்சர்ட் ரிஷி, 'யாஷிகாவும் நானும் 'சில நொடிகள்' என்ற படத்தில் நடித்து வருகிறோம். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் ஷேர் செய்தேன். மற்றபடி எல்லோரும் நினைப்பது போல் எனக்கும் யாஷிகாவும் இடையில் காதல் கிடையாது. வெளியூரில் இருந்ததால் இதுகுறித்து உடனடியாக விளக்கம் தர முடியவில்லை' என்று கூறியுள்ளார். மேலும், பட புரொமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் இருவரும் ஷேர் செய்ததாகவும் கூறியுள்ளார்.