பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
பசங்க படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இதில் பிரீத்தி, கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த அவசர திருமணம் எதற்காக என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கிஷோர் - பிரீத்தி இருவரும் இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர்.
பிரீத்தியின் தந்தைக்கு கடந்த 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகளின் திருமணத்தை சீக்கிரம் பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இல்லையேல் தனது 31வது வயதில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கிஷோர் விளக்கமளித்துள்ளார்.