துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14 அன்று திரைக்கு வருகிறது. இதுதவிர அவர் நடித்துள்ள மற்றொரு படமான அயலான் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மிருணாள் தாகூர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமன்னா உடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 வெப்சீரிஸில் நடித்துள்ளார்.