தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சூப்பர் சிங்கர் 7வது சீசன் மூலம் சின்னத்திரைக்குள் பாடகியாக நுழைந்தவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். அதன்பிறகு பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த பிரபலம் காரணமாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. டான், நான் சிரித்தால், காசேதான் கடவுளடா படங்களில் நடித்தார். ஆனால் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு திரும்பினார். அதோடு மீண்டும் இசை ஆல்பத்திற்கு திரும்பி இருக்கிறார்.
சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள 'டிக்கி டிக்கி டா' என்ற இசை ஆல்பத்தில் பாடி, ஆடியுள்ளார். இந்த ஆல்பத்தை இசை அமைத்து இயக்கி சிவாங்கியுடன் ஆடியிருக்கிறார் தர்புகா சிவா. பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.