திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகை கங்கனா ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தாலும் தலைவி படத்திற்கு பின் தமிழ் படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் பி வாசு இயக்கத்தில் ‛சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார். செப்., 15ல் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழில் ஒரு முக்கிய நட்சத்திரம், ஹிந்தியில் ஒரு பிரபலம் இணைந்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது இந்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை மலையாள இயக்குனர் விபின் இயக்குகிறார். இதில் முதல் முறையாக விஜய் சேதுபதி, கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கின்றனர். திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.