தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவராக இருப்பவர் சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் சங்கத்தின் பணிகளை செய்ய விடாமல் செயலாளர் மற்றும் பொருளாளர் இடையூறு செய்வதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரை பணி செய்ய விடாமல் தலைவர் ஜாக்குவார் தங்கம் தடுக்ககூடாது. சங்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள் யாரையும் சங்கத்திற்குள் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக யாராவது செயல்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.