சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். என்றாலும் இதுவரை மகனின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லி, நேற்று ஜவான் திரைக்கு வந்த நிலையில் , தனது மகன் மீர் தன்னுடைய மார்பில் படுத்து தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜவான் படவேலைகளில் பிஸியாக இருந்ததால் எனது மகனுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறியிருந்த அட்லீ, தற்போது இன்னும் நான்கு மாதங்களுக்கு தனது மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.