சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தான் நடித்த காலத்தில் மூன்று மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருந்து இந்தியாவின் கனவுக்கன்னி என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பிரபல தயாரிப்பாளர் போனிகபூரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள்.
ஜான்வி கபூர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். குஷி கபூர் ஹிந்தியில் ஓடிடியில் வெளியாக உள்ள 'த ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் குஷி கபூர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனின் உதவியாளர் ஆகாஷ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க குஷி சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முற்றிலும் அமெரிக்காவில் படமாக உள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதாம்.
இதற்கு முன்பு ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்ற செய்திகள் வந்த போது அது தவறான செய்தி என்று மறுத்தார் போனி கபூர். தற்போது குஷி கபூர் பற்றி வந்துள்ள செய்திக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என காத்திருக்கிறார்கள்.