கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை |
துபாய் சென்றிருந்த ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை திரும்பினார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்ருதியுடன் நெருக்கமாக நடந்து வரவும், அவருடன் பேசவும் முயற்சி செய்தார். நீங்கள் யார் என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள், உங்களை எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு வேகமாக அவரிடமிருந்து நகர்ந்து ஓடிவந்த ஸ்ருதிஹாசன், அங்கு நின்றிருந்த புகைப்படக்காரர்களை பார்த்து, 'என்னை பின்தொடர்ந்து வரும் அந்த நபர் யார்?” என்று கேட்டார். அதற்கு புகைப்படக்காரர்கள், 'அந்த நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை' என்றனர்.
இது தொடர்பான வீடியோவை புகைப்படக்காரர் பயானி வெளியிட்டுள்ளார். அதில், 'ஸ்ருதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்ததும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் பேச முயல்கிறார். ஸ்ருதி அவரை புறக்கணித்து சென்றாலும் பின்தொடர்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது “என்னை பின்தொடர்ந்து வந்த நபர் யார் என்று தெரியாது. விமான நிலையத்தில் நடந்து சென்றபோது அவர் என் பின்னால் வருவதை கவனித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமாக அவர் வந்ததால் அசவுகரியமாக இருந்தது. இதனால் வேகமாக நடந்து வெளியே வந்தேன். காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார். நான் பயந்து போனேன்.
நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே நழுவி சென்று விட்டார். எனக்கு சொந்தமாக பவுன்சர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். அதனால்தான் இப்போது வரை பாதுகாப்புக்கு பாடிகார்டுகள் இல்லாமல் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு பாடிகார்டு வைத்துக்கொள்ள வேண்டுமோ? என யோசிக்கிறேன்'' என்றார்.