ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார். அதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த செப்டம்பர் 28ம் தேதி (இன்று) இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தேதியில் படம் வெளியாகாது என்றும் இன்னும் குவாலிட்டியாக இந்த படைப்பை கொடுப்பதற்காக கால தாமதம் ஆவதால் வேறொரு தேதியில் சலார் ரிலீஸ் ஆகும் என்றும் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாகும் என கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே தேதியில் ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படமும் வெளியாக இருக்கும் என்றும் இரண்டுக்கும் கடும் போட்டி இருக்கும் என்றும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது.
ஆனால் அதைவிட முக்கியமாக ஏற்கனவே இதே தேதியில் நடிகர் வெங்கடேஷின் சைந்தவ், நானியின் ஹாய் நன்னா, சுதீர் பாபுவின் ஹரோம் ஹரா மற்றும் நிதின் நடித்துள்ள 'எக்ஸ்ட்ரா ; ஆர்டினரி மேன்' ஆகிய படங்கள் நீண்ட நாளைக்கு முன்பே இந்த தேதியை முடிவு செய்து அறிவித்து விட்டன. தற்போது சலார் படம் வெளியாவதால் திரையரங்குகளின் முக்கியத்துவமும் ரசிகர்களின் வரவேற்பும் முதலில் சலாருக்கு தான் கிடைக்கும் என்பதால் தங்களது படத்திற்கு வேறு வழியின்றி கடுப்புடன் வேறு ரிலீஸ் செய்திகளை தேட ஆரம்பித்துள்ளனர்.
பெரிய படங்கள் இப்படி இஷ்டத்திற்கு தங்களது ரிலீஸ் தேதியை மாற்றுவதால் ஏற்கனவே ரிலீஸுக்கு திட்டமிட்டுள்ள பல படங்கள் இதுபோன்று சங்கடங்களை சந்திப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.