மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி என இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளார் என்கிறார்கள். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷூடன் இணைந்து சீடன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தில் 1947 ஆகஸ்ட் 16 படத்தில் நாயகியாக நடித்த ரேவதி ஷர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.