தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி முன் அறிமுகம் எதுவும் சொல்ல தேவையில்லை. எப்போதுமே மீடியாக்களில் பரபரப்பான செய்திகளில் இடம் பெற்று வரும் வனிதா விஜயகுமார் பிக் பாஸ், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மட்டுமில்லாமல் தனது திருமண சர்ச்சைகள் மூலமாகவும் பிரபலமானவர். சமீபகாலமாக சர்ச்சைகளை கடந்து சினிமாவில் பிஸியாகி உள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வனிதா, தற்போது ஒரு படத்தின் கதாநாயகியாகவே நடிக்கிறார். படத்தின் பெயர் வைஜெயந்தி ஐபிஎஸ். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வனிதா.
இந்த படத்தை மனோஜ் கார்த்திக் காமராஜூ என்பவர் இயக்குகிறார். சங்கர் கணேஷ் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்களை இயக்குனர் பேரரசு எழுதுகிறார். வைஜெயந்தி ஐபிஎஸ் என்றாலே 90களின் ஆரம்பத்தில் விஜயசாந்தி நடித்த படம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். விஜயசாந்தி என்கிற பெயரே மறந்துபோய் அவரை வைஜெயந்தி என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைத் தேடித் தந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அதே பெயரை வனிதா விஜயகுமார் தனக்காக இப்போது பயன்படுத்துகிறார். இவருக்கு இந்த டைட்டில் எந்த அளவிற்கு பலன் தரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.