தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்த படத்தையெல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு, புதிய படங்கள் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கான மேல் சிகிச்சை பெறுபவதற்காக அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்றார் சமந்தா. சிகிச்சை முடிந்து சமீபத்தில் இந்தியா திரும்பினார். அடுத்து அவர் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு தடாலடியாக கவர்ச்சி போஸ் கொடுத்து அனைரைவும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதுவும் பிகினி உடையில்... மேலும் அந்த பத்திரிகையின் அட்டைப்படத்திற்கும் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகைகள் காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் லைக்கை தட்டிவிட்டிருக்கிறார்கள்.
இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சமந்தா வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தோல்வியுற்ற திருமணத்தை எட்டியபோது, என் உடல்நலம் மற்றும் வேலை பாதிக்கப்பட்டது, கடந்த இரண்டு வருடங்களாக நான் சகித்ததை விட மிகக் குறைவாகவே மக்கள் அறிவார்கள்.
அந்த நேரத்தில், உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து மீண்டும் வந்த நடிகர்கள் அனுபவித்த கஷ்டங்களை பற்றி நான் படித்தேன். அவர்களின் கதைகளைப் படித்தது எனக்கு உதவியது. அவர்கள் அதைச் செய்தால், என்னாலும் முடியும் என்பதை அறிய இது எனக்கு பலத்தை அளித்தது.
இந்த தேசத்தில் நேசித்த நட்சத்திரமாக இருப்பது ஒரு நம்பமுடியாத பரிசு. எனவே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எத்தனை சூப்பர் ஹிட்கள் மற்றும் பிளாக்பஸ்டர்கள் இருந்தது, எத்தனை விருதுகள் வெல்லப்பட்டுள்ளது, சரியான உடல், அல்லது மிக அழகான ஆடைகள் ஆகியவை எப்போதும் முக்கியமல்ல. வலி, கஷ்டங்கள், தாழ்வுகள் இவற்றை பகிரங்கமாக சந்திப்பதுதான் முக்கியம். இனி நான் என்னிடம் உள்ள எல்லாவற்றுடனும் போராடப் போகிறேன். என்னை பார்த்து இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும் தொடர்ந்து போராடுவதற்கான வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். என்று பதிவிட்டிருக்கிறார்.