2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் நேற்று விஜய் சேதுபதி நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' என்ற மவுன மொழி படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் பேசும்போது “சினிமா புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறது. எமோஷன்களை வெளிப்படுத்தி சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறது. ஆகவே தான் சினிமா ஒரு அற்புதமான ஊடகம். நானும் இதில் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். குறிப்பாக ஒரு நடிகன் என்ற முறையில் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கிறேன். நான் இதை அனுபவிக்கிறேன். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்றார்.
காந்தி டாக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது ஒரு பிளாக் காமெடி படம். கிஷோர் இயக்கி உள்ளார். விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.