தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான இணையதளம் ஐஎம்டிபி. தியேட்டர்களில், ஓடிடி தளங்கில் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து அதனை படத்திற்கான ஆதரவாக கொண்டு தரவரிசை பட்டியலை இந்த அமைப்பு வெளியிடும். அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரையிலான படங்களின் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது.
அதன்படி தியேட்டர்களில் வெளியான படத்தில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஷாரூக்கான் நடித்த 'பதான்' படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் 4வது இடத்தையும், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. பட்டியில் விபரம் வருமாறு:
தியேட்டரில் வெளியான படங்கள்
1. ஜவான்
2. பதான்
3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
4. லியோ
5. ஓஎம்ஜி 2
6. ஜெயிலர்
7. கடார் 2
8. தி கேரளா ஸ்டோரி
9. தூ ஜூதி மெயின் மக்கார்
10. போலா
ஓடிடியில் வெளியான படங்கள்:
1. லஸ்ட் ஸ்டோரி 2
2. ஜானே ஜான்
3. மிஷன் மஜ்னு
4. பவால்
5. சோர் நிகல் கே பாகா
6. ப்ளடி டாடி
7. சிர்ப் ஏக் பண்டா காபி ஹை
8. கேஸ்லைட்
9. தி ஜாக்புர்ட் மிஸ்ட்ரி
10. மிசஸ் அண்டர்கவர்
வலைத் தொடர்கள்
1. பார்ஸி
2. கன்ஸ் அண்ட் குலாப்ஸ்
3. நைட் மானேஜர்
4. கோஹ்ரா
5. அசுர் 2
6. ராணா நாயுடு
7. தஹாத்
8. சாஸ், பாஹு அவுர் பிளமிங்கோ
9. ஸ்கூப்
10. ஜூபிலி