தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தி படத்தில் அறிமுகமான பூஜா காந்தி 'கொக்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு வைத்தீஸ்வரன், தொட்டால் பூ மலரும், திருவண்ணாமலை, தலையெழுத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கன்னட சினிமாவுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். 'தண்டுபால்யா' என்ற படத்தில் கொடூர கொலைகாரியாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்து பின்னர் அரசியலில் இருந்து வெளியில் வந்தார்.
பூஜா காந்திக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் நடக்கவில்லை. தற்போது அவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த பெங்களூரு தொழில் அதிபர் விஜய்யை திருமணம் செய்து கொண்டுள்ளார். விஜய் பெங்களூரில பல இடங்களில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் பெங்களூரு யெலஹங்காவில் நடந்தது. பஞ்சாபை சேர்ந்த பூஜா காந்தி கன்னடத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டவர். இப்போது கன்னட முறையில் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.