தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜெய்பீம், குட் நைட் படங்கள் மூலம் புகழ்பெற்ற மணிகண்டன் அடுத்து நடிக்கும் படம் லவ்வர். 'மாடர்ன் லவ்' வெப்சீரிஸ் புகழ் ஸ்ரீகவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்குகிறார். இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் கவனிக்கின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் தொடங்கி உள்ளன. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மணிகண்டன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவருக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் கதை என்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் பிரபுராம் வியாஸ் கூறும்போது “உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால், எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.