தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

விஜய் சேதுபதி சத்தமின்றி நடித்து வந்த அவரது 51வது படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை 7சி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்தது சொல்றேன்' படத்தை இயக்கிய பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சண்டைக் கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள, பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளைத் துவங்கவுள்ளனர்.