துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சென்னை: சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது.
இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை.
நாராயணபுரம் ஏரி உடைந்ததால், அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பள்ளிக்கரணை ஆனந்த் நகர் எக்ரட் பார்க்கில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை. வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.