5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளை அந்த டிரைலர்கள் கடந்தது. தற்போது 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.
'சலார்' டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆங்கில வசனம் பேசும் கதாபாத்திரம் ஒன்றுடன் பிரபாஸ் கடைசியில் அதிரடி காட்டும் அந்த டீசர் ஒரே ஒரு வெர்ஷனில் மட்டுமே வெளியானது. அதற்கு 144 மில்லியன் பார்வைகள் இதுவரை கிடைத்துள்ளன. அந்த டீசரின் பார்வையை தற்போது டிரைலரின் பார்வை கடந்துள்ளது.
'சலார்' படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளது. அதற்குள் படக்குழுவினர் எப்படி பான் இந்தியா புரமோஷன்களை முடிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.