தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

காதிர்ஸ் எண்ட்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரித்துள்ள படம் 'ஆத்மா'. ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். நாயகியாக 'தில்லுக்கு துட்டு 2' புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஆடிசம் பாதித்த இளைஞராக முதன் முறையாக நரேன் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 'கைதி' படத்திற்கு பிறகு எனக்கு போலீஸ் கேரக்டர்கள்தான் அதிகமாக வந்தது. 10 படங்களுக்கு மேல் நிராகரித்து விட்டேன். பல படங்களில் நடித்தாலும் எனது நடிப்பு திறமையை நிரூபிக்கிற ஒரு கேரக்டர் அமையவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதை போக்கும் வகையில் அமைந்த படம்தான் ஆத்மா. எனது கேரியரில் இது முக்கியமான படம்.
இந்த கதையை கேட்டவுடன் என்னால் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக வந்த சில ஆங்கில படங்கள், கமல் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படங்களை பார்த்து நடிக்கும் தைரியம் வந்தது. ஆடிசம் பாதித்தவர்களை சந்தித்து அவர்களது குரல்மொழி, உடல் மொழியை கற்றுக் கொண்டேன். பொதுவாக ஆடிசம் பாதித்தவர்கள் குழந்தைகளாக, சிறுவர்களாக இருப்பார்கள். ஆடிசம் பாதித்த இளைஞர்களை பார்ப்பது அரிது. அதனால் அந்த பயிற்சி பெற மிகவும் சிரமப்பட்டேன். 2 வருடங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, 12 கிலோ வரை எடை கூட்டி நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும். என்கிறார் நரேன்.