தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2024ம் ஆண்டு ஆரம்பமாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு பெரும் வெற்றிக்காகத் தமிழ் சினிமா காத்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் வெளியான படங்களில் ஒரு படம் கூட 100 கோடி வசூலைக் கடக்கவில்லை. வரவேற்பு, வசூல் என்று சொல்லப்பட்ட படங்கள் 'லாபம்' தந்ததா என்ற கேள்விக்கு பதிலில்லை.
இந்நிலையில் வரும் வாரம் பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படம், மற்றும் மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.
'லால் சலாம்' படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் மத ஒற்றுமையைப் பற்றிய கருத்துக்களைக் கூறும் படம் என்கிறார்கள். சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் ரஜினிகாந்த் தியேட்டர்கள் பக்கம் மக்களை வரவழைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மணிகண்டன், ஸ்ரீ கவுரி ப்ரியா, கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ள 'லவ்வர்' படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். கடந்த வருடம் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'குட்நைட்' பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு இது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இன்றைய கால காதலைப் பற்றிய கதையைத்தான் இயக்குனர் படமாக்கி இருக்கிறாராம். 'லவ் டுடே' போல இப்படமும் வரவேற்பு பெறும் என்கிறார்கள்.