தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஒரு விஷயம் பிரபலமானால் அதை வைத்து 'மீம்ஸ்'களை உருவாக்கித் தள்ளுவதில் தமிழ் மீம்ஸ் கிரியேட்டர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களிலும், சினிமா ரசிகர்களிடத்திலும் தற்போது டிரென்ட் ஆக இருக்கும் ஒரு விஷயம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படம். அந்தப் படத்தைப் பார்க்காமல் விட்டால் நம்மை 'ஒரு சிறந்த சினிமா ரசிகன்' என நண்பர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோர்களோ என பலரும் அந்தப் படத்தைப் பார்த்து வருகிறார்கள்.
இதனால், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமான கையோடு மீம்ஸ் கிரியேட்டர்களிடமும் பிரபலமாகிவிட்டது. படத்தில் இடம் பெறும் 'குணா குகை' பின்னணியில் பலவிதமான மீம்ஸ்கள் தற்போது உலா வர ஆரம்பித்துவிட்டன. வழக்கம் போல மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக வடிவேலுதான் அந்த மீம்ஸ்களில் முக்கிய கதாபாத்திரம். அவரது நகைச்சுவை போட்டோக்களை வைத்து பலவிதமான 'நக்கல், நையாண்டி, டிரோல்' கருத்துக்களுடன் மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
ஒரு படம் சினிமா ரசிகர்களைக் கடந்து எப்போது மீம்ஸ் வரை வந்துவிட்டதோ அப்போதே அந்தப் படம் பலரையும் சென்று சேர்ந்துவிட்டது என்று அர்த்தம். அது 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினருக்கு பெருமையான ஒன்றுதான்.