2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார்.
சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவைக் காதலித்தார். அந்த காதலும் கை கூடவில்லை. இந்நிலையில் 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதலில் விழுந்தார் சித்தார்த். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் படங்கள் தொடர்ந்து வெளியாகின. அதிதியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வந்த நிலையில் இன்று(மார்ச் 27) தெலுங்கானா மாநிலம், வனப்பர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக கோயிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணம் பற்றி சித்தார்த், அதிதி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.