தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் பரபரப்பான தனது நடவடிக்கைகள் மூலம் தன்னை எப்போதும் பரபரப்பில் வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். தனது மகள் ஜோவிகாவை நடிகையாக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். தற்போது மகளின் கிளாமரான படங்களை வெளியிட்டு வருகிறார். ஒரு படத்தில் ஜோவிகா கமிட்டாகி இருப்பதாகவும் வனிதா கூறினார்.
இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. வனிதாவின் முதல் கணவர் ஆகாஷின் மகன் தான் ஸ்ரீஹரி. தற்போது குறும்படங்கள், இசை ஆல்பத்தில் பிஸியாக இருக்கும் ஸ்ரீஹரியின் சினிமா முயற்சிகளும் தொடர்கிறது. தற்போதைய தகவல்படி பிரபு சாலமன் இயக்கத்தில் ஸ்ரீஹரி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்திருக்கிறது. ஸ்ரீஹரி தனது அம்மா வனிதாவை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.