திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. நகைச்சுவை படங்களே இவரது வெற்றிக்கு காரணம் என்கிற நிலையில் கடந்த பத்து வருடமாக ஹாரர் பக்கமும் கவனத்தை திருப்பி அதிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் ஏற்கனவே தான் இயக்கி வெற்றி பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில் சுந்தர்.சி கலந்துகொண்டபோது அவரிடம், ஏற்கனவே லாரன்ஸின் முனி திரைப்படம் நான்கு பாகங்களாக வந்துவிட்டது. நீங்களும் அரண்மனை படத்திற்கு நான்கு பாகங்களை எடுத்து விட்டீர்கள். இந்த இரண்டையும் இணைத்து ஒரு புதிய படத்தை நீங்கள் உருவாக்க முயற்சி செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த சுந்தர்.சி, “ஏற்கனவே அரண்மனையும் ஒரே மாதிரி இருக்கிறது.. காஞ்சனாவும் ஒரே மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.. அதனால் இதை இரண்டையும் இணைத்து எடுப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆனால் என்னுடைய இன்னொரு படமான கலகலப்பு படத்தையும் இந்த அரண்மனை படத்தையும் ஒன்றாக இணைத்து 'அரண்மனையில் கலகலப்பு' என ஒரு படத்தை உருவாக்கலாம் என்கிற திட்டம் இருக்கிறது. அடுத்து வெளியாகும் கலகலப்பு 3 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் இந்த திட்டத்தை மேற்கொண்டு நகர்த்த முடியும்” என்று கூறியுள்ளார்.