சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பெரும்பாலான மலையாள நடிகர்கள் ஒரு கட்டத்தில் இயக்குனராகி விடுவார்கள். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர் ஜோசப், பட்டாளம், தட்டயன் மறையத்து, ஹோட்டல் கலிபோர்னியா, புலிமடா, நேரம், ரெட்ட உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 'ஜெகமே தந்திரம்' படம் முலம் தமிழில் அறிமுகமான இவர், 'புத்தம் புது காலை விடியாதா' படத்திலும் நடித்துள்ளார். தற்போது கமலின் 'தக்ஸ் லைப்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ஆகிறார் ஜோஜூ ஜார்ஜ். அவர் இயக்கும் முதல் படத்திற்கு 'பனி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. அபிநயா, சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ் வி.பி. ஜிண்டோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ் படத்துக்கு இசையமைக்கின்றனர்.
விரைவில் இந்த படம் ரிலீஸாக தயாராகும் நிலையில் மலையாளத்தில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜோஜு ஜார்ஜ், அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் கலந்து கொண்டனர். அப்போது ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “இவரை முதன் முதலாக பார்த்ததுமே இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு இவர்தான் சரியானவர் என முடிவு செய்து விட்டேன். ஆனால் இவர் எப்படி சவால்களை எதிர்கொண்டு நடிக்கப் போகிறார் என்கிற சந்தேகம் இருந்தது.
ஆனால் அதற்கு முன்பாக இவரை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குனரை சந்தித்தபோது, அபிநயாவுக்கு ஆங்கிலத்தில் வசனங்களை எழுதி கொடுத்தால் பிரமாதமாக நடித்து விடுவார் என்று கூறினார். படப்பிடிப்பில் அதை அனுபவபூர்வமாக பார்க்க முடிந்தது. அதேபோல நடனத்தில் என்ன செய்யப் போகிறார் என்று நினைத்தேன் அதிலும் அசத்தி விட்டார்” என்று அபிநயாவை பாராட்டி உள்ளார்.