மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென், பசுபதி, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது. இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் டப் ஆகிறது. படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொன்னது போலவே கதை மகாபாரதக் காலத்தில் இருந்து துவங்குகிறது. தீபிகா, அமிதாப்பின் தோற்றங்கள் மிரட்டுகிறது. இதுதவிர ஹாலிவுட் படங்களில் இருக்கும் டெக்னாலஜி இந்த படத்திலும் தெரிகிறது. பிரபாஸின் ஆக் ஷன், அவரின் தோற்றம், புஜ்ஜி கார் என மிரட்டலாக உள்ளது.
டிரைலரின் இறுதியில் வில்லனாக கமலின் என்ட்ரி மாஸ் கூட்டுகிறது. கமலின் முகத்தோற்றம் ஒரு விநாடி இடம் பெறுகிறது. அதோடு “பயப்படாதே... புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு” என்கிறார் கமல்.
ஹாலிவுட் தரத்தில் டிரைலர் இருந்தாலும் அதிலும் குறைகள் கண்டுபிடித்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளிவரும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமலின் பகுதி குறைவாகவே வருகிறது. இரண்டாம் பகுதியில் தான் அவரின் காட்சிகள் அதிகம் உள்ளது என்கிறார்கள்.