துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் நேற்று (ஜூன் 22) கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இயக்குனர்கள் அட்லி, நெல்சன் திலீப்குமார், லோகேஷ்கனகராஜ், வெங்கட்பிரபு, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும், கமல்ஹாசன், சாந்தனு, கவின் உள்ளிட்ட நடிகர்களும் வரிசையாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகைகளில், கீர்த்தி சுரேஷ் சற்று தாமதமாக நேற்று இரவு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒன்று போல் நீல நிற உடை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிவிட்டு இறுதியில் ‛அன்புடன் சுரேஷ்ஷ்ஷ்' எனவும் பதிவிட்டுள்ளார்.
விஜய் உடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை திரிஷா நேற்று முழுவதும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இன்று தனது ‛எக்ஸ்' பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார். அதில் விஜய் கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இருவரும் லிப்டில் பயணிக்கும் போது ‛மிரர் செல்பி' எடுத்துள்ளனர். அந்த போட்டோ இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.