ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அஷ்வின் குமார். அதன்பின் உடனடியாக அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அவருக்கு எதிராக அமைந்து, அவரது ஆரம்பத்தையே ஆட்டி வைத்தது. “நான் கதை கேட்கும் போது நல்லா இல்லைன்னா தூங்கிடுவேன். 40 கதைக்கும் மேல் கேட்டு நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இதுதான்,” என அப்போது அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. பல உதவி இயக்குனர்கள் அவரைக் கண்டித்தார்கள். மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அப்படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' படத்தில் நடித்தார். அப்படமும் ஓடவில்லை. தற்போது முன்னாள் டிவி தொகுப்பாளரும், 'புத்தகம்' படத்தை இயக்கியவருமான விஜய் ஆதிராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்க உள்ள 'நொடிக்கு நொடி' படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் அஷ்வின் குமார்.
அவரை தூங்கவிடாமல் 'நொடிக்கு நொடி' விழிப்புடன் இருக்கும்படியான கதையைச் சொல்லியிருப்பார் விஜய் ஆதிராஜ் எனத் தெரிகிறது. படம் வரும் வரை பொறுத்திருப்போம்.