தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையைமப்பில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2023ம் வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி வெளியான படம் 'விடுதலை 1'. நிஜக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அப்படம் 50 நாட்களைக் கடந்து ஓடி லாபகரமான வசூலையும் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடக் கடைசியிலேயே வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால், முதல் பாகம் வெளிவந்து இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் வெளியாகவில்லை. இரண்டாம் பாகத்தில் 'அசுரன்' நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டும் என்ற ஒரு தகவலும் இப்படம் பற்றி இருக்கிறது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு 'விடுதலை 2' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த 'மகாராஜா' படம் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது ஓடிடி தளத்தில் அந்தப் படம் டாப் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தைப் சாதகமாக்க 'விடுதலை 2' முதல் பார்வையை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. 'மகாராஜா'வின் வெற்றியால் 'விடுதலை 2' படத்திற்கு வியாபார வட்டாரங்களில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாம். அதனால், படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாம்.