தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகில் பெண்கள் குறிப்பாக நடிகைகள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் படம் சம்பந்தப்பட்ட சிலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக பலமான குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. கடந்த 2017ல் கேரள அரசு இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்தது. திரையுலகை சேர்ந்த பலரிடம் விசாரித்த பிறகு சமீபத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஏற்கனவே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகைகள் பலரும் தைரியமாக முன்வந்து தாங்கள் யார் மூலமாக பாலியல் அத்துமீறலுக்கு ஆளானோம் என பொதுவெளியில் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பொதுச் செயலாளர் சித்திக் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சமீபத்தில் பதவி விலகினார். அது மட்டுமல்ல நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் யாரும் இந்த அறிக்கை வெளியானது குறித்து பெரிய அளவில் உடனடியாக தங்கள் வரவேற்பை தெரிவிக்கவே இல்லை.
அதுமட்டுமல்ல இது போன்று நடிகர் சங்கத்தில் தங்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து புகார் அளிக்க நடிகைகள் சென்றபோது அவற்றை ஒதுக்கவும் அல்லது பிரச்சினையை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி செல்லவுமே வலியுறுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் சங்க தலைவரான மோகன்லால் மற்றும் நிர்வாக குழுவில் பொறுப்பு வகிக்கும் மற்ற 16 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.
மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மாவில் (நடிகர் சங்கம்) உறுப்பினராக உள்ள சிலர் நிர்வாகக் குழுவில் பொறுப்பு வகிக்கும் சிலர் மீது கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தார்மீக பொறுப்பேற்று நிர்வாக கமிட்டியை கலைக்க முடிவு செய்துள்ளோம். புதிய நிர்வாக குழு வரும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு உருவாக்கப்படும். புதிய தலைமை வரும்போது மிகுந்த பலத்துடனும் புத்துணர்ச்சியுடன் பொறுப்பேற்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தவறுகளை சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.