தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கடந்த 1991ல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒயிலாட்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சர்மிளா. அதன் பிறகு தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். தொடர்ந்து மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து கவனம் பெற்றார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள திரையுலகையே உலுக்கிய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த கசப்பான பாலியல் துன்புறுத்தல் அனுபவங்கள் குறித்து வெளியே கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சர்மிளாவும் இதேபோன்று கிட்டத்தட்ட 28 முறை பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி அதிலிருந்து தப்பித்த அனுபவங்கள் குறித்து கூறி அதிர்ச்சி அளித்தார். அதில் முக்கியமாக பிரபல மலையாள இயக்குனரும் பழசிராஜா படத்தை இயக்கியவருமான இயக்குனர் ஹரிஹரன் மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளார் சர்மிளா.
இது குறித்து அவர் கூறும்போது, “பரிணயம் என்கிற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது இயக்குனர் ஹரிஹரன் 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்து கொள்ள சொல்லி அதில் நடித்த நடிகர் விஷ்ணு என்பவர் மூலமாக தன்னிடம் தூது அனுப்பியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட நடிகர் விஷ்ணு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது சர்மிளாவிடம் இயக்குனர் ஹரிஹரன் அவ்வாறு நடந்து கொண்டது உண்மைதான் என கூறியுள்ளார்.