தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டாலா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை (செப்-27) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தெலுங்கில் முதல் படம் என்றாலும் ஏற்கனவே தனது அம்மா கோலோச்சிய இடம் என்பதால் தனது முதல் படத்திலேயே அழுத்தமாக முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்காக ஓரளவுக்கு தெலுங்கு கற்றுக்கொண்டு இந்த படத்தில் வசனம் பேசி நடித்துள்ளார் ஜான்வி கபூர்.
சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூரின் நடிப்புக்கு ஒரு சாம்பிள் பற்றி கூறினார். தெலுங்கில் ஒன்றரை பக்கம் வசனம் பேசி ஒரே டேக்கில் ஒரு காட்சியை ஓகே செய்தார் ஜான்வி கபூர். இயக்குனர் அந்த காட்சியை பார்த்து சரிதானா என்பது சொல்வதற்குள் ஜூனியர் என்டிஆர் கைதட்டி சூப்பர் என்று சொன்னதைக் கேட்டு இயக்குனர் கொரட்டாலா சிவாவே ஆச்சரியப்பட்டு போனாராம். அந்த அளவிற்கு ஜான்வி கபூர் அந்த காட்சியில் அழுத்தமாக முத்திரை பதித்துள்ளாராம். அது மட்டுமல்ல பல காட்சிகளில் நடிக்கும்போது அவரது அம்மா ஸ்ரீதேவியின் சாயல் அவரிடம் தெரிந்ததை தான் பார்க்க முடிந்தது என்றும் கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.