ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பைக் ரேஸ் பிரியரான டிடிஎப் வாசன் தனது எனது யூடியூப் சேனல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அதேசமயம் சாலைகளில் விபத்தில் சிக்கி கைது செய்யப்படும் அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலமாக சினிமாவிலும் கதாநாயகனாக டிடிஎப் வாசன் அறிமுகம் ஆகிறார் என்கிற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்படுகிறார் என படத்தின் இயக்குனர் செல்அம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் படத்திற்கான புதிய கதாநாயகன் தேர்வு நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் தற்போது இந்த படத்தில் நடிப்பதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த தகவலை இயக்குனர், கூல் சுரேஷ் இருவருமே உறுதி செய்துள்ளனர். நடிகர் கூல் சுரேஷ், சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் படங்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருபவர். ஆனால் அதைவிட ஒவ்வொரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போதும் தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வித்தியாசமான பாணியில் கருத்துக்களை சொல்வது என எப்போதும் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் தான் கூல் சுரேஷ். நகைச்சுவை நடிகரான அவருக்கு டிடிஎப் வாசன் விலகியது கதாநாயகனுக்காக வாசலை திறந்து விட்டுள்ளது என்றே சொல்லலாம்.