ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்...டிக்...டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜிடம் ஒரு சிறுவன் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்து 100 ரூபாயை திரும்ப கேட்டேன். இந்த நேரத்தில் புத்தகத்தை என் காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.