துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா கடந்த 14ம் தேதி திரைக்கு வந்தது. நெகட்டிவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் கங்குவா படத்தின் இந்த மோசமான வசூலை பார்த்து ஹிந்தியில் சூர்யா நடிக்க இருந்த கர்ணா படத்தை டிராப் செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாக இருந்தது. அதோடு சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்பிரா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யா, இந்த படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். இப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரவுபதியாக ஹீரோயின் வேடத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கங்குவா படத்தின் மோசமான வசூலை பார்த்து, கர்ணா படத்தை 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருந்த பாலிவுட் பட நிறுவனம் தற்போது அப்படத்தை டிராப் செய்துள்ளதாம்.