தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். மாமன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர். இன்று(டிச., 16) படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு துவங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார் இயக்குநர். ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார்.