நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய மகன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தால் கைதாகி ஜாமினில் உள்ள அல்லு அர்ஜுனை நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு சிக்கடபள்ளி காவல் நிலையத்திற்குச் சென்ற அவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. விசாரணையின் போது அவரிடம் பிரிமியர் காட்சி நடந்த சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் சிசிடிவி காட்சிகள் போட்டுக் காட்டியுள்ளார்கள். அவற்றைப் பார்த்த அல்லு அர்ஜுன் எமோஷனலாகி கலங்கியதாகச் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 'புஷ்பா 2' குழு சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு டிரஸ்ட் அமைத்து உதவி செய்ய உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் 1 கோடி, இயக்குனர் சுகுமார் 50 லட்சம், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் 50 லட்சம் என 2 கோடி ரூபாயை டிரஸ்ட்டில் போட உள்ளார்களாம். வழக்கு விவகாரம் முடிந்த பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.