தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலா இயக்கி உள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா, கிர்த்தி செட்டி, மமிதா பைஜு நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவும் கிர்த்தி செட்டியும் விலகி விட்டனர். மமீதா பைஜூ விலக்கப்பட்டார்.
இதுகுறித்து பின்னர் மமிதா கூறும் போது "வணங்கான் படத்தில் இருந்து நான் விலக்கப்படவில்லை நான் தான் விலகினேன். படப்பிடிப்பு தளங்களில் பாலா கடுமையாக நடந்து கொள்கிறார். ஒருமுறை சரியாக நடிக்கவில்லை என்று கூறி முதுகில் அடித்தார். அவருடன் பணியாற்ற முடியாது என்பதால் நானே விலகிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாலா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார். தற்போது, 'வணங்கான்' படம் குறித்து மீடியாக்களிடம் பேசி வரும் பாலா மமீதாவை அடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "மமிதா நடிக்க வேண்டிய கேரக்டருக்கு மேக்கப் தேவையில்லை ஆனால் அவர் ஒரு நாள் நிறைய மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கூறி அடிப்பதுபோல கை ஓங்கினேனே தவிர அடிக்கவில்லை. பின்னர் தான் மேக்கப் உமன் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு படத்தின் கதை, கேரக்டர் குறித்து எதுவும் தெரியாது என்பதும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இருவரும் சகஜம் ஆகிவிட்டோம் என்று கூறி இருக்கிறார்.